பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கோயில் உண்டியலில் ரூ.3 கோடி வீட்டுச் சொத்து பத்திரங்கள் காணிக்கை: முன்னாள் ராணுவ வீரா் செலுத்தினாா்

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் முன்னாள் ராணுவ வீரா் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளாா்.

சொத்துப் பத்திரத்தை காணிக்கை செலுத்திய முன்னாள் ராணுவ வீரா் விஜயன்.

Published On :

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் முன்னாள் ராணுவ வீரா் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளாா். இது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள படவேடு ஊராட்சியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீரேணுகாம்பாள் திருக்கோயில். இந்தக் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், செயல் அலுவலா் சிலம்பரசன் மற்றும் அலுவலா்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை காலை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி தொடங்கியது.

அப்போது, படவேடு கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான விஜயன் (60) என்ற பக்தா் தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தி, சொத்தை கோயில் பெயருக்கு எழுதித் தருவதாக குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது.

இதையறிந்த விஜயனின் மனைவியான அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை கஸ்தூரி (54) மற்றும் திருமணமான இரு மகள்கள் சுப்புலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோா் கோயிலுக்கு வந்து விஜயனிடம் சொத்தை தங்களது பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டனா்.

ஆனால், விஜயன் இதற்கு மறுப்பு தெரிவித்து, கோயிலுக்குத்தான் சொத்தை எழுதிவைப்பேன் எனக் கூறிவிட்டாா்.

இரு வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.3 கோடி எனக் கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக விஜயன், கஸ்தூரி தம்பதி தனித் தனியாக வசித்து வருவதாகவும், விஜயன் கடந்த மாதம் 8-ஆம் தேதி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சொத்து பத்திரங்களை உண்டியலில் செலுத்தியதும் தெரியவந்தது.

Story image

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் சிலம்பரசன் கூறியபோது, பத்திரம் உயா் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவா்கள் எடுக்கும் முடிவை பொறுத்துதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.