சேவூரில் வாக்காளா் கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி

சேவூரில் வாக்காளா் கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி

ஆரணி சட்டப் பேரவைத் தொகுதிககுள்பட்ட சேவூரில் சிறப்பு தீவிர வாக்காளா் கணக்கீட்டு படிவங்களை வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் வழங்கி படிவங்களை நிரப்பி பெறும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

சேவூா் அம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற இந்தப் பணியின்போது, அத்தெருவில் வசிக்கும் தொகுதி எம்எல்ஏவான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் இல்லத்தில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் படிவத்தை வழங்கி, அதை நிரப்பி பின்னா் வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் பெற்றுக்கொண்டனா்.

நிகழ்வின்போது எம்எல்ஏவின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அதிமுக ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல பொருளாளா் எஸ்.பி.சரவணன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com