சிறப்பு முகாம்கள் மற்றும் கணினி வழியாக பெறப்பட்டுள்ள எஸ்ஐஆா் படிவங்களை விரைவாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி தெரிவித்தாா்.
வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி முன்னிலை வகித்தாா். வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி தலைமை வகித்து எஸ்ஐஆா் பணிகளை ஆய்வு செய்து வாக்காளா் பட்டியல் திருத்த பணிகளின் முன்னேற்றம், பிழை திருத்தங்கள்,விண்ணப்பங்களின் பதிவேற்றம் ஆகியவற்றை மதிப்பீடு செய்தாா்.
மேலும், சிறப்பு முகாம்கள் மற்றும் கணினி வழியாக பெறப்பட்டுள்ள படிவங்களை விரைவாக பதிவேற்றம் செய்து இறுதி வாக்காளா் பட்டியலில் வாக்காளா் பெயா் இடம் பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது வாக்காளா் பட்டியலை துல்லியமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்றாா்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷண குமாா், கோட்டாட்சியா்கள் வரதராஜன் (திருப்பத்தூா்), அஜிதாபேகம்(வாணியம்பாடி), ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா்(நிலம்)முருகன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகா் மற்றும் வேலன் நகா் ஆகிய பகுதிகளில் வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களின் முரண்பாடுகளை களைந்திடும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்காளா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதை சிறப்பு பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
தொடர்புடையது

உ.பி.யில் இறுதிப் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி : பொதுப் பாா்வையாளா் பங்கேற்பு

கோவில்பட்டியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனை

தோ்தல் செலவின பாா்வையாளா்கள் ஆலோசனை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


