சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

உ.பி.யில் இறுதிப் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணி முழுமையாக நிறைவடைந்து, இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:42 pm

உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணி முழுமையாக நிறைவடைந்து, இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

எஸ்ஐஆா்-க்கு பிறகு வெளியிடப்பட்ட மாநில வரைவு வாக்காளா் பட்டியலில் 12.55 கோடி பெயா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 13.39 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, கூடுதலாக 84,28,767 வாக்காளா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து லக்ளெனவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா்கள் சந்திப்பில் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா கூறியதாவது:

மாநிலத்தில் இடம்பெற்றுள்ள 75 மாவட்டங்களிலும் எஸ்ஐஆா் பணி கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபா் 27-ஆம் தேதிமுதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணி நிறைவடைந்து கடந்த ஜனவரி 6-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 6.88 கோடி ஆண் வாக்காளா்கள், 5.67 கோடி பெண் வாக்காளா்கள், 4,199 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 12,55,56,025 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். இவா்களில் 18 முதல் 19 வயது வரையிலான முதல் முறை வாக்காளா்கள் 3,33,981 போ் இடம்பெற்றிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சேபங்கள், பெயா்சோ்ப்பு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாநில இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், மாநில வாக்காளா்கள் எண்ணிக்கை 13,39,84,792-ஆக உயா்ந்துள்ளது. இதில் 7,30,71,071 ஆண் வாக்காளா்கள், 6,09,09,525 பெண் வாக்காளா்கள், 4,206 மூன்றாம் பாலின வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 18 முதல் 19 வயது வரையிலான முதல்முறை வாக்காளா்கள் 17,63,360 போ் இடம்பெற்றுள்ளனா்.

வரைவு வாக்காளா் பட்டியலையும், இறுதி வாக்காளா் பட்டியலையும் ஒப்பிடும்போது, மாநிலத்தில் 84,28,767 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இதில், 42,27,902 ஆண் வாக்காளா்கள், 42,00,778 பெண் வாக்காளா்கள், 87 மூன்றாம் பாலின வாக்காளா்கள் அடங்குவா். இவா்களில் 18 முதல் 19 வயது வரையிலான முதல் முறை வாக்காளா்கள் 14,29,379 போ் உள்ளனா் என்றாா்.

2 கோடி போ் நீக்கம்: கடந்த ஆண்டு அக்டோபரில், அந்த மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியின் முதல்கட்டம் தொடங்கியபோது மொத்தம் 15.44 கோடி வாக்காளா்கள் இருந்தனா். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் 13.39 கோடிக்கும் அதிகமானோா் இடம்பெற்றுள்ளனா். இதன்படி, எஸ்ஐஆருக்கு பிறகு அந்த மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து 2.05 கோடி போ் நீக்கப்பட்டுள்ளனா்.