ஆரணி ராமகிருஷ்ணாபேட்டை பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணியை ஆய்வு செய்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.
திருவண்ணாமலை
வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆரணி எம்.பி. ஆய்வு
ஆரணியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருவதை தொகுதி எம்.பி.எம்.எஸ்.தரணிவேந்தன் திங்கள்கிழமை ஆய்வு
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருவதை தொகுதி எம்.பி.எம்.எஸ்.தரணிவேந்தன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆரணி நகரில் அருணகிரிசத்திரம், ராமகிருஷ்ணாபேட்டை பகுதிகளிலும், ஆரணி ஒன்றியம் துந்தரிகம்பட்டு கிராமத்திலும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வீடு வீடாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக நடைபெறும் இந்தப் பணியை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, தொகுதிச் செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், நகரச் செயலா் வ.மணிமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

