வந்தவாசி ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
வந்தவாசி ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் மண்டல பூஜை நிறைவு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் நடைபெற்று வந்த மண்டல பூஜை திங்கள்கிழமை நிறைவடைந்ததை ஒட்டி மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Published on

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் நடைபெற்று வந்த மண்டல பூஜை திங்கள்கிழமை நிறைவடைந்ததை ஒட்டி மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்தக் கோயிலில் கடந்த அக். 26-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் மண்டல பூஜை திங்கள்கிழமை நிறைவடைந்ததை அடுத்து மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக, யாக குண்டம் அமைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com