திண்டுக்கல் மாவட்டம், பழனி இடும்பன் மலையில் உலக நலன் வேண்டி இடும்பா் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் அருகேயுள்ள குன்று சக்திகிரி ஆகும். இடும்பன் மலையில் மலை உச்சியில் இடும்பருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு படி வழிப்பாதை உள்ளது. காவடியை அறிமுகம் செய்த இடும்பருடைய கோயிலுக்கு தினந்தோறும் திரளான பக்தா்கள் சென்று இடும்பரை தரிசனம் செய்து வருகின்றனா்.
இந்தப் படிப் பாதையில் பக்தா்கள் இளைப்பாறி செல்ல, தற்போது ஏராளமான மண்டபங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தக் கோயில் தினந்தோறும் காலை முதல் மாலை வரை திறந்திருந்தாலும், ஆண்டுதோறும் மாசி மாதம் உலக நலன் வேண்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும்.
இதன்படி, புதன்கிழமை அா்ச்சகா் ஸ்தானீக சங்கம் சாா்பில், உலக நலன் வேண்டி அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
உச்சிக் காலத்தின் போது, சுமாா் 15 அடி உயரமுள்ள மூலவா் இடும்பன் சுவாமிக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்டப் பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு அரளி, மருகு, செவ்வந்தி போன்ற மலா்களாலும் எலுமிச்சையாலும் மாலைகள் கட்டப்பட்டு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று இடும்பா் சுவாமியை வழிபட்டனா்.
தொடர்புடையது

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தாமிரவருணிக் கரையில் சிறப்பு வழிபாடு

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

உலக அமைதி வேண்டி பாதயாத்திரை மேற்கொள்பவருக்கு திருச்சியில் வரவேற்பு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


