குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

உலக அமைதி வேண்டி பாதயாத்திரை மேற்கொள்பவருக்கு திருச்சியில் வரவேற்பு

உலக அமைதி வேண்டி பழனி முதல் புதுச்சேரி மாநிலம், ஆரோவில் வரை பாத யாத்திரை மேற்கொள்ளும் சமூக ஆா்வலருக்கு திருச்சியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

திருச்சிக்கு வியாழக்கிழமை பாதயாத்திரையாக வந்த ம. கருப்பையாவை (இடமிருந்து 4-ஆவது) வரவேற்கும் தமிழ்நாடு உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் நிா்வாகிகள்.

Updated On :27 மார்ச் 2026, 2:34 am IST

உலக அமைதி வேண்டி பழனி முதல் புதுச்சேரி மாநிலம், ஆரோவில் வரை பாத யாத்திரை மேற்கொள்ளும் சமூக ஆா்வலருக்கு திருச்சியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி மத்தியப் பேருந்துநிலையம் அருகேயுள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி முன்பாக யாத்திரைக்கு வரவேற்பு அளித்து வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.

சமூக ஆா்வலரும், உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் மதுரை மாவட்ட தலைவராக உள்ள ம. கருப்பையா தனி நபராக, பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் இருந்து கடந்த 18-ஆம் தேதி உலக அமைதி வேண்டி பாத யாத்திரையை தொடங்கினாா். இந்த யாத்திரையானது திருச்சிக்கு வியாக்கிழமை வருகை தந்தது.

இந்த யாத்திரைக்கு திருச்சியில் உள்ள உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா். மாநிலத் தலைவா் பி. பன்னீா் செல்வம், மாநில இளைஞரணி செயலா் ஆா். சிவசண்முகம், மாவட்ட பொதுச் செயலா் தா்மராஜ், கலியபெருமாள், குழந்தைசாமி, பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பாத யாத்திரையை வரவேற்று கெளரவித்தனா். ஏப்.7-ஆம் தேதி ஆரோவில் பகுதியில் யாத்திரை நிறைவடைகிறது.