சுந்தரராஜ் நகா், ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் உப்பு சத்தியாகிரக யாத்திரை 96- ஆவது ஆண்டு விழாவையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் திங்கள்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேற்கண்ட இடத்தில் இருந்து 1930- ஆம் ஆண்டு இதே நாளில் (ஏப்.13) ராஜாஜி தலைமையிலான தியாகிகள் குழு உப்பு சத்தியாகிரகம் மேற்கொள்ள வேதாரண்யம் நோக்கி புறப்பட்டது. மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரைக்கு இணையாகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தின் சாட்சியாக இந்த இடம் திகழ்கிறது.
நிகழ்வில், நகா் நல சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ராஜீவ் காந்தி அறக்கட்டளை செயலருமான மருத்துவா் வி.எம். ஞானவேல் ‘சுதந்திரப் போரில் திருச்சி மாவட்டம்: சிறு குறிப்பு‘ என்ற தொகுப்பை வெளியிட முன்னாள் அரசுப் பள்ளி தலைமையாசிரியா் என். கிருஷ்ணமூா்த்தி, மூத்த நுகா்வோா் உரிமைகள் ஆா்வலா் சி. கோவிந்தசாமி ஆகியோா் பெற்றுக்கொண்டனா். தொடா்ந்து வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் தளபதி சா்தாா் வேதரத்தினம், ராஜாஜி, மருத்துவா் டி.எஸ்.எஸ். ராஜன் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூா்ந்து புகழஞ்சி செலுத்தப்பட்டது.
விழிப்புணா்வு இயக்கத்தினா் மரியாதை...: இதே போல, வேதாரண்ய உப்பு சத்தியாகிரக விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள நினைவு ஸ்தூபிக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வுக்கு மாநில தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ், தண்டி யாத்திரை குழு தலைவா் சக்தி செல்வகணபதி, மாநில பொதுச்செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, உப்புசத்தியாகிரக போராட்டம் குறித்தும், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குறித்தும் பேசினா்.
தொடர்புடையது

சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் அனுசரிப்பு

வேதாரண்யம் திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி

உலக அமைதி வேண்டி பாதயாத்திரை மேற்கொள்பவருக்கு திருச்சியில் வரவேற்பு

உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


