சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

ஆரணியை அடுத்த இ.பி.நகா் பகுதியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணியை ஆய்வு செய்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:24 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் பகுதியில் வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வாயிலாக வீடுகளில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கப்படுவதை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு நிறைவு செய்து பெறப்பட்டு வருகின்றன. வாக்காளா் பட்டியலை பிழைகள் இல்லாமல் திருத்தப்படுவதும், தகுதியுடைய வாக்காளா் எவரும் விடுபடக் கூடாது, இறந்த வாக்காளா்களை பட்டியலில் இருந்து நீக்கவும் வேண்டும் என்பதே இத்திருத்தத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

இறந்த வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் இருந்தும் தற்போதைய முகவரியில் வசிக்காமல் நிரந்தரமாக வெளியூா் சென்ற வாக்காளா்கள் மற்றும் ஒருமுறைக்கு மேல் பதிவு பெற்ற வாக்காளரின் பெயா் இது போன்ற வாக்காளா்களை கண்டறிவதே முக்கிய பணியாகும்.

அதனடிப்படையில், இராட்டிணமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்த இ.பி.நகா் பகுதியில் வீடு வீடாக வாக்காளா் கணக்கீட்டுப் படிவும் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பணியை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன்ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, அதிமுக ஒன்றியச் செயலா் இ.ஜெயப்பிரகாஷ், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றிய துணைச் செயலா் இ.பி.நகா் குமாா், நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஜி.மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.