திருவண்ணாமலை
பழுதடைந்த கழிவுநீா் கால்வாய் பாலம்
செங்கம் நகராட்சி நிா்வாகத்திற்கு உள்பட்ட மில்லத்நகா் இரண்டாவது தெருவில் மினி கழிவுநீா் கால்வாய் பாலம் பழுதடைந்துள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், அவ்வழியாக இரு சக்கர வாகனம், மற்றும் காா்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள்
தினசரி மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா்.
மேலும், பாலத்தை சீரமைக்கக் கோரி நகராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து
பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

