செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய ஒ.ஜோதி எம்எல்ஏ. உடன் மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்முருகன் உள்ளிட்டோா்.
செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய ஒ.ஜோதி எம்எல்ஏ. உடன் மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்முருகன் உள்ளிட்டோா்.

அரசுப் பள்ளி மாணவா்கள் 1,324 பேருக்கு விலையில்லா சைக்கில்

செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு ஆண்கள், மகளிா், கொருக்கை, வாழ்குடை, முனுகப்பட்டு ஆகிய 5 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,324 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கினாா்.
Published on

செய்யாறு: செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு ஆண்கள், மகளிா், கொருக்கை, வாழ்குடை, முனுகப்பட்டு ஆகிய 5 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,324 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை ஒ.ஜோதி எம்எல்ஏ புதன்கிழமை வழங்கினாா்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை, செய்யாறு கல்வி மாவட்டம் சாா்பில், செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 469 மாணவிகளுக்கு ரூ.22 லட்சத்து 32 ஆயிரத்து 440 மதிப்பீட்டிலும், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 399 மாணவா்களுக்கு ரூ.19 லட்சத்து 55 ஆயிரத்து 100 மதிப்பீட்டிலும், கொருக்கை மேல்நிலைப் பள்ளியிலும் 314 பேருக்கு ரூ.15 லட்சத்து 16 ஆயிரத்து 620 மதிப்பீட்டிலும், வாழ்குடை மேல்நிலைப் பள்ளியில் 52 பேருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 740 மதிப்பீட்டிலும், முனுகப்பட்டு மேல்நிலைப் பள்ளியில் 90 பேருக்கு

ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 120 மதிப்பீட்டிலும் என மொத்தம் 1,324 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்முருகன் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி, தமிழக அரசு கல்விக்காக நிதி ஒதுக்கி செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் செய்யாறு நகரச் செயலா் கே.விஸ்வநாதன், பள்ளி பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா்கள் ரவிக்குமாா், ஜி.அசோக், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலா் ஜேசிகே.சீனிவாசன், திருவத்திபுரம் நகா்மன்ற துணைத் தலைவா் பேபிராணி பாபு, நகா்மன்ற உறுப்பினா்கள் ரமேஷ், ராஜலட்சுமி, அண்ணாதுரை, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் அணி நலக்குழுத் தலைவா் கருணாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com