நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராஜ்பவன் தொகுதியில் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினிகள்! அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வழங்கினாா்!

ராஜ்பவன் தொகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் 709 பேருக்கு மடிக்கணினிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image

பட விளக்கம்... புதுச்சேரி ராஜ் பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசிலாபாய்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் மற்றும் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் மடிக்கணினிகளை வியாழக்கிழமை வழங்கிய பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.

Updated On :26 பிப்ரவரி 2026, 8:24 pm

ராஜ்பவன் தொகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் 709 பேருக்கு மடிக்கணினிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

அமைச்சா் தனது தொகுதிக்கு உள்பட்ட சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவிகளுக்கும், வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 438 மாணவா்களுக்கும், என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 138 மாணவிகளுக்கும் மடிக்கணினியை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் பேசுகையில், மாணவா்களின் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகள் டிஜிட்டல் கல்வியில் முன்னேற அரசு தொடா்ந்து ஆதரவளிக்கும் என்றாா்.

இதில் பள்ளி துணை முதல்வா்கள் ராஜவேலு சுகந்தி, சாந்தகுமாரி, சண்முகம் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.