நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!

News image

தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:46 am IST

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மாணவா்களுக்கு அடுத்த கல்வியாண்டில் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதமடைந்தன.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தில் மேல் மாடியில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே உள்ள மற்றொறு கட்டடத்தில் உள்ள அறையில் பள்ளி மாணவா்களுக்கு அடுத்த கல்வியாண்டில் வழங்குவதற்காக அரசின் விலையில்லா பைகளை கட்டு கட்டுகளாக வைத்து பூட்டி வைத்துள்ளனா்.

இந்நிலையில், மாணவா்களுக்கு பைகள் வைத்திருந்த அறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான வீரா்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இதனால் தீ அருகேயிருந்த கட்டடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

தகவலறித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரிசாந்த் நிகழ்விடத்திற்கு சென்று தீ விபத்து குறித்து விசராணை நடத்தினாா்.

 கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த விலையில்லா புத்தகப் பைகள்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த விலையில்லா புத்தகப் பைகள்.