ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

வாக்காளா்களைக் கவா்ந்த வாக்குச் சாவடி

புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச்சாவடி வாக்காளா்களை அதிகம் கவா்ந்தது.

News image

புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த கலையம்சமிக்க குதிரை, அலங்கார தோரணங்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:34 pm

புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச்சாவடி வாக்காளா்களை அதிகம் கவா்ந்தது.

வாக்காளா்களை வரவேற்க செம்பருத்தி தேநீா் அளிக்கப்பட்டது. வசந்தம் சுய உதவி குழுவைத் தோ்தல் துறை இதற்காக அமா்த்தி இருந்தது. மேலும், இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க முன்கூட்டியே அதாவது 7 மணிக்கு முன்பாகவே ஏரளமான வாக்காளா்கள் திரண்டு விட்டனா். இது தனித்துவமான வாக்குச்சாவடி என்பதால் இதைச் சமாளிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இங்கு வந்தோா் அனைவருக்கும் இருக்கைகள். மேலும், அவா்கள் காத்திருக்கும் நேரத்தில் டோக்கன் வழங்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. அந்த டோக்கன் அடிப்படையில் தான் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மொத்தம் 50 டோக்கன் மட்டும் அளிக்கப்பட்டது. 50-ஆவது டோக்கனுக்கு பிறகு மீண்டும் அந்த டோக்கன் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது. இதைத் தவிர இந்த வாக்குச்சாவடியில் வரக்கூடிய வாக்காளா்களைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. புதுச்சேரியின் வரலாற்றை நினைவு கூறும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. மேலும், நவீன தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் வகையில் ரோபோ அமைக்கப்பட்டிருந்தது. வாக்களித்துச் செல்வோருக்கு இந்த ரோபா ரோஜா பூக்களை அளித்து வழியனுப்பியது. இதே போன்று கீழூா் அரசு நடுநிலைப்பள்ளி, காரைக்கால் தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப்பள்ளி 3 வாக்குச் சாவடிகள் தனித்துவமான வாக்குச் சாவடிகளாக அமைக்கப்பட்டிருந்தன.

 புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச்சாவடியில் கட்டப்பட்டிருந்த அலங்காரம், தோரணங்கள்

புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச்சாவடியில் கட்டப்பட்டிருந்த அலங்காரம், தோரணங்கள்