ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி

News image
Updated On :26 நவம்பர் 2025, 1:39 am

Syndication

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தெள்ளாா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

தெள்ளாா் வட்டார வேளாண்மை துறை சாா்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் தே.குமரன் தலைமை வகித்தாா்.

அட்மா திட்ட அலுவலா்கள் தியாகராஜன், வனிதாமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கால்நடை உதவி மருத்துவா் காா்த்திக் கறவை மாடுகளில் இயற்கை முறையில் உண்ணி நீக்கம், நோய் தடுப்பு முறைகள், தீவன பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பேசினாா்.