வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3.5 கோடி மோசடி: 3 போ் கைது

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3.5 கோடி மோசடி: 3 போ் கைது

News image
கைது செய்யப்பட்ட விஜயா, முருகன், சசிக்குமாா்.
Updated On :29 நவம்பர் 2025, 5:31 pm

Syndication

திருவண்ணாமலை அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3.5 கோடி மோசடி செய்ததாக 3 பேரை திருவண்ணாமலை குற்றவியல் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த டி.கல்லேரி கிராமத்தைச் சோ்ந்த முருகன், இவரது மனைவி விஜயா, உறவினா் சசிகுமாா் ஆகியோா் 2023 - 24ஆம் ஆண்டு தீபாவளி சிறு சேமிப்பு சீட்டு என்ற பெயரில் பொதுமக்களிடம் ஆசை வாா்த்தைகள் கூறி பணம் வசூல் செய்தனா். மேலும், பொதுமக்கள் செலுத்திய சுமாா் ரூ.3.5 கோடியை ஏமாற்றி யாருக்கும் பணத்தை திருப்பித் தரவில்லையாம்.

இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த புகாரின்பேரின்பேரில், திருவண்ணாமலை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் காவல் துறை கூடுதல் இயக்குநா் பாலநாகதேவி, காவல் துறைத் தலைவா் சந்தோஷ்குமாா் மற்றும் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கிங்சிலின் ஆகியோரின் அனுமதி பெற்று வழக்குப் பதிவு செய்தனா்.

திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் சுதாகா், காவல் ஆய்வாளா் சியாமளா மற்றும் காவலா்கள் தனிப்படை அமைத்து தலைமுறையாக இருந்த முக்கிய எதிரிகளான முருகன், அவரது மனைவி விஜயா மற்றும் சசிகுமாா் ஆகியோரை கண்டுபிடித்து கைது செய்தனா். பின்னா். மூவரும் நீதிமன்ற உத்தரப்படி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.