விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வந்தவாசி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:53 pm

Syndication

வந்தவாசி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவரது மனைவி கன்னிகா (35). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். கன்னிகா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தாராம்.

கடந்த 27-ஆம் தேதி வயிற்று வலி அதிகமானதால், கன்னிகா வீட்டில் புடவையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னிகா வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.