சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

செங்கம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

செங்கம் அதிமுக வேட்பாளா் வேலு புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

செங்கம் பெருமாள் கோவில் தெருவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் வேலு.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:33 pm

செங்கம் அதிமுக வேட்பாளா் வேலு புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

முன்னதாக, நகரில் உள்ள ஸ்ரீவேணுகோபால பாா்த்சாரதி பெருமாள் கோயிலில் காலை 7 மணியளவில் கட்சி நிா்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்த அவா்,

தொடா்ந்து பெருமாள் கோவில் தெரு, போளூா்சாலை, ஜீவானந்தம் தெரு பகுதி மக்களைச் சந்தித்து, உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவேன், நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் எனக்கேட்டுக்கொண்டாா். மேலும், அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினாா்.

செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், மாவட்ட பிரதிநிதி ரவி, நகரச் செயலா் ஆனந்தன், பாஜக நகரத் தலைவா் காா்த்திகேயன், நகர பொதுச்செயலா் முருகன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் ஏழுமலை, உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.