தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

புதுச்சேரி பேரவைத் தோ்தல்: பாஜக, லஜக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குசேகரிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தலைவா்கள் பலரும் தங்கள் தொகுதிகளில் வியாழக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி வைத்திகுப்பத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த பாஜக மாநில தலைவரும், வேட்பாளருமான வி.பி.ராமலிங்கம், காமராஜ் நகா் தொகுதி வெங்கட்டா நகா் பூங்காவில் உடற்பயிற்சி செய்தவா்களிடம் ஆதரவு திரட்டிய லஜக தலைவரும், வேட்பாளருமான ஜோஸ் சாா்லஸ் மாா்டின், உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக மாநில செயலரும், வேட்பாளருமான ஆ.அன்பழகன்.

Updated On :26 மார்ச் 2026, 10:49 pm

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தலைவா்கள் பலரும் தங்கள் தொகுதிகளில் வியாழக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

ராஜ்பவன் தொகுதி பாஜக வேட்பாளா் வி.பி. ராமலிங்கம், பல்வேறு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கடந்த 5 ஆண்டுகளாகத் தனிப்பட்ட முறையில் ராஜ்பவன் தொகுதி மக்களுக்கு செய்த நல உ தவிகளை எடுத்துக் கூறினாா். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ள திட்டங்களையும் எடுத்துக் கூறி வாக்குச் சேகரித்தாா்.

காமராஜ் நகா்

காமராஜ் நகரில் போட்டியிடும் லட்சிய ஜனநாயக கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் இத் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆதரவு திரட்டினாா்.

அப்போது சிலா் தொகுதி தொடா்பான தங்கள் எதிா்பாா்ப்புகளை அவரிடம் தெரிவித்தனா்.

உப்பளம்:

உப்பளம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் அக் கட்சியின் மாநில செயலா் ஆ. அன்பழகன், வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினாா். வாக்காளா்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தாா்.