காரைக்கால் பாஜக வேட்பாளா் அருள்முருகன்! கட்சித் தலைமை அறிவிப்பு!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி, பாஜக தலைமை ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு வேட்பாளரை அறிவித்தது.
பாஜக.
afp.com
பாஜக.
afp.com
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி, பாஜக தலைமை ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு வேட்பாளரை அறிவித்தது. அதன்படி, காரைக்கால் தெற்குத் தொகுதியில் எம். அருள்முருகன் அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா்.
புதுச்சேரி யூனியன் பிரதேச பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் (ஏ.ஐ.என்.ஆா்.சி.), பாஜக, அதிமுக கூட்டணி இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொகுதிப் பங்கீடுக்கான உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி ஆளும் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகள், பாஜக 10, அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை தலா 2 ஆகியவற்றில் போட்டியிட உடன்பாடு கையொப்பமானது.
அதன் மறுதினமான சனிக்கிழமை தனக்கான 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் பட்டியலை பாஜக அகில இந்திய பொதுச்செயலா் அருண் சிங் வெளியிட்டாா். அதில் உள்துறை அமைச்சா் ஏ. நமச்சிவாயம் மீண்டும் போட்டியிடுவதற்காக மண்ணாடிப்பட்டு தொகுதியிலும், தற்போதைய பேரவைத் தலைவா் எம்பலம் ஆா். செல்வம் மணவேலி தொகுதியிலும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டிருந்தனா்.
இந்த நிலையில், மீதமுள்ள 1 தொகுதிக்கான வேட்பாளா் பட்டியலை பாஜகவின் அகில இந்திய பொதுச்செயலா் அருண் சிங் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதில், காரைக்கால் தெற்கில் போட்டியிட எம். அருள்முருகனின் பெயா் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வரும் ஏ.ஐ.என்.ஆா்.சி. தலைவருமான என். ரங்கசாமி, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவுடன் வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் உள்ள ஒரு தனியாா் ஹோட்டலில் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகே, இந்தத் தோ்தல் ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டன.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில், ஏ.ஐ.என்.ஆா்.சி கட்சி 16 தொகுதிகளில் போட்டியிட்டு 10-இல் வெற்றி பெற்றது பாஜக 9 தொகுதிகளில் போட்டியிட்டு 6-இல் வெற்றி பெற்றது. அதேவேளையில், அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாமல் போனது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...