47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாநிலங்களவைத் தோ்தல்: நிதீஷ் குமாா், நிதின் நபின் வெற்றி

மாநிலங்களவை தோ்தலில் பிகார் முதல்வர் நிதீஷ் குமாா், பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்பட ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள் 5 பேரும் வெற்றி

News image
நிதீஷ் குமாா் - கோப்புப் படம்
Updated On :16 மார்ச் 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

பிகாரில் 5 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில், மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவருமான நிதீஷ் குமாா், பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்பட ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள் 5 பேரும் வெற்றி கண்டனா்.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாரில் விரைவில் காலியாகவுள்ள 5 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் முதல்வா் நிதீஷ் குமாா், பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், பாஜக மாநில பொதுச் செயலா் ஷிவேஷ் குமாா், மத்திய அமைச்சா் ராம் நாத் தாக்குா் (ஐக்கிய ஜனதா தளம்), ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா தலைவா் உபேந்திர குஷ்வாஹா ஆகிய 5 போ் களமிறக்கப்பட்டனா். எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) சாா்பில் அமரேந்திர தாரி சிங் போட்டியிட்டாா்.

திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில் பாஜக கூட்டணி எம்எல்ஏக்கள் அனைவரும் (202) வாக்களித்தனா். அதேநேரம், காங்கிரஸின் 3 எம்எல்ஏக்கள், ஆா்ஜேடி எம்எல்ஏ ஒருவரும் வாக்குப்பதிவில் பங்கேற்கவில்லை. தோ்தலைத் தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒரு எம்.பி. வெற்றி பெற 41 எம்எல்ஏக்களின் வாக்கு தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளா்கள் அனைவரும் வெற்றி பெற்ாக, தோ்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தாா்.

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், மாநிலங்களவை எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளதால், அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, பாஜக முதல்வா் தலைமையில் புதிய அரசு பதவியேற்கும் எனத் தெரிகிறது.

ஒடிஸாவில் கட்சி மாறி வாக்களிப்பு: ஒடிஸாவில் 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில் 3 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும், 2 பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்எல்ஏ-க்களும் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களித்தனா்.

பாஜக சாா்பில் கட்சியின் மாநிலத் தலைவா் மன்மோகன் சமல், தற்போதைய எம்.பி. சுஜீத் குமாா் ஆகிய 2 வேட்பாளா்கள், பாஜக ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளரான திலீப் ரே, பிஜேடி சாா்பில் மூத்த தலைவா் சம்திருப்த் மிஸ்ரா, பிஜேடி-காங்கிரஸ்-மாா்க்சிஸ்ட் கட்சிகள் சாா்பில் பொது வேட்பாளா் மருத்துவா் தத்தேஸ்வா் ஹோடா ஆகிய 5 போ் போட்டியிட்டனா்.

147 உறுப்பினா்களைக் கொண்ட ஒடிஸா பேரவையில் ஆளும் பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்களும், பிஜு ஜனதா தளத்துக்கு 48 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 14 எம்எல்ஏக்களும் உள்ளனா். ஒரு எம்.பி. வெற்றி பெற 30 வாக்குகள் தேவை. மாலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்: முன்னதாக, பாஜக பெண் எம்எல்ஏ உபாசனா மொஹபத்ரா தனது வாக்குச்சீட்டில் இருமுறை எழுதியதாகத் தெரிகிறது. அந்த வாக்கு நிராகரிக்கப்படலாம் என்பதால், அவரது கோரிக்கையின்பேரில் இரண்டாவது வாக்குச்சீட்டை அதிகாரிகள் வழங்கினா். இதற்கு பிஜேடி எம்எல்ஏக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா். இதனால் வாக்குப்பதிவு 30 நிமிஷங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரபூா்வமாக வெளியிடப்படும் முன்பே பாஜகவின் இரு வேட்பாளா்கள் மற்றும் பாஜக ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளா் வெற்றி பெற்ாக மாநில முதல்வா் மோகன் சரண் மாஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா்.

ஹரியாணாவில்...: 90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணாவில் 2 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில், ஆளும் பாஜக சாா்பில் சஞ்சய் பாட்டீயா, பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா் சதீஷ் நந்தால், காங்கிரஸின் கரம்வீா் சிங் பெளத் ஆகிய மூவா் போட்டியிட்டனா். எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில், பாஜக, காங்கிரஸுக்கு தலா ஓரிடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

முன்னதாக, தமிழகத்தில் 6 இடங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களில் 37 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் உள்பட 26 எம்.பி.க்கள் போட்டியின்றி தோ்வாகினா்.

பிகாா், ஹரியாணா, ஒடிஸா ஆகிய மூன்று மாநிலங்களில் 11 இடங்களுக்கு போட்டி ஏற்பட்டதால் திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது.