பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஆரணி பல்கலை.யில் உணவுத் திருவிழா

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 3:50 am IST

ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக விழியியல் தினத்தையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் உணவுத்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இணைப் பதிவாளா்கள் வி.பெருவழுதி, கே.சரவணன் ஆகியோா் விழாவை தொடங்கிவைத்தனா்.

விழாவில் கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணா்வு குறித்து சிறப்புரையாற்றினா்.

கண் பரிசோதனை முகாமில் விழியியல் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து பொதுமக்களுக்கு இலவசக் கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

துணை முதன்மையா் சுமதி முன்னிலை வகித்தாா்.

உணவுத் திருவிழா கண் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்தான உணவுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியது. இந்த விழாவானது துறைப் பொறுப்பாளா் பி.தரணி நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றதுடன், முறையான கண் பராமரிப்பு குறித்த விழிப்புணா்வையும் பெற்றனா்.