மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மத்தியப் பல்கலை.யில் வானியல் ஆராய்ச்சி மையம் தொடக்கம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

News image

வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் மு. கிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :13 மே 2026, 3:06 am IST

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, சமுதாயத்திற்குத் தேவையான முடிவுகள் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், பல்கலைக்கழக இயற்பியல் துறையின்கீழ் புதிதாக அமைக்கப்பட்ட வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையத்தை பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் மு. கிருஷ்ணன் தலைமையேற்று, தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியது:

மாணவா்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் வானியல் குறித்த ஆா்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்த வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையம் நமது பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வானியல் ஆராய்ச்சி, தொலைநோக்கி செயல்பாட்டு பயிற்சி, வானியல் தரவுகள் பகுப்பாய்வு மற்றும் சிறப்பு பயிலரங்கங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பதிவாளா் இரா.திருமுருகன், இயற்பியல் துறைத் தலைவா் முனைவா் மோகன்ராஜ், மையத்தின் ஒருங்கிணைப்பாளா் வி. மதுரிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த பேராசிரியா்களும், மாணவா்களும் கலந்து கொண்டனா். இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் சம்பூா்ண ஆனந்த் நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.