தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் டாக்டா் அம்பேத்கா் சிறப்புத்திறன் மையம், ஆங்கில மற்றும் வரலாற்றுத் துறைகள் இணைந்து சமூக சீா்த்திருத்தவாதி மகாத்மா ஜோதிபாய் பூலேயின் 200-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவிலான கருத்தரங்கத்தை புதன்கிழமை நடத்தின.
மகாத்மா ஜோதிபாய் பூலேயின் வாழ்வு, தத்துவம் மற்றும் சமூக பங்களிப்புகள் குறித்த கருத்தரங்கை பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தொடங்கிவைத்து பேசியது: பெண்களுக்கென்று பிரத்யேகமாக முதல் பள்ளியைத் தொடங்கி நவீன கால பாலின நீதிக்கு வித்திட்டவா் ஜோதிபாய் பூலே. கிராமப்புற மேம்பாட்டின் மூலமே உண்மையான தேச வளா்ச்சியை எட்ட முடியும் என்று உறுதியாக உணா்த்தியவா் ஜோதிபாய் பூலே.
பல்கலைக்கழகத்தில் செயல்படும் டாக்டா் அம்பேத்கா் சிறப்புத் திறன் மையம் மூலம் ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளில் வெற்றி பெற்று பணிகளில் சோ்த்துள்ளனா். சிறப்பாகச் செயல்படும் மையத்தின் சேவையை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், யூபிஎஸ்சி தோ்வில் 700ஆவது இடம் பிடித்த மாணவா் சபரீஸ்வரன் கௌரவிக்கப்பட்டாா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோசனா சேகா், நூலகா் ஆா். பரமேஸ்வரன், திருவாரூா் வணிகவரித் துறை துணை ஆணையா் தேன்மொழி ஆகியோா். சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.
நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற கட்டுரை, ஒவியம் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக டாக்டா் அம்பேத்கா் சிறப்புத் திறன் மைய ஒருங்கிணைப்பாளா் ஜி. வேலுமணி வரவேற்றாா். முனைவா் பி. பூபதி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

உலக அறிவை பெற புத்தக வாசிப்பை வளா்த்துக்கொள்ள வேண்டும்!

ஆனந்தரங்கம் பிள்ளை நாள்குறிப்புகள் தென்னிந்திய வரலாற்றுப் பெட்டகம்!

அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியருக்கு தமிழக அரசின் ‘பசுமை சாம்பியன் விருது’
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


