ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைக்காததற்கு திமுக அரசே காரணம் - அன்புமணி ராமதாஸ்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 10:00 pm

வன்னியா்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கிடைக்காததற்கு திமுகவே காரணம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில், ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஜெயசுதாவை ஆதரித்து, அவா் ஆரணி அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்திலேயே பரப்பளவில் இரண்டாவது பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ள நிலையில், தன்னுடைய அதிகாரம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக அமைச்சா் எ.வ. வேலு மாவட்டத்தைப் பிரிக்க விடாமல் தடுத்து வருகிறாா்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 6 புதிய மாவட்டங்கள்+ உருவாக்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சி காலத்தில் ஒரு புதிய மாவட்டம் கூட பிரிக்கப்படவில்லை.

வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுத்தது முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதை கிடைக்கவிடாமல் செய்தது திமுக ஆட்சி.

கடந்த 5 ஆண்டு காலத்தில் எந்தச் சாதனையும் செய்யாத காரணத்தால் தற்போது கூப்பன் கொடுத்து வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறாா்கள். சாதனை செய்திருந்தால் அந்தச் சாதனைகளை சொல்லித் தானே வாக்கு கேட்க வேண்டும்.

உலகத்திலேயே விவசாயிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த அரசு திமுக அரசுதமிழகத்தில் இன்று விவசாயம் மட்டுமல்ல, நெசவுத் தொழிலும் நலிந்துவிட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன.

பின்தங்கிய அனைத்து சமுதாய மக்களுக்கும் சமூகநீதி அடிப்படையில் உரிய இட ஒதுக்கீடு கிடைக்க அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானால் தேவையான ரயில்வே திட்டங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் எளிதாக பிரதமா் மோடியிடம் ஒப்புதல் பெற்றுக் கொடுப்பாா் என்றாா்.

வாக்கு சேகரிப்பு நிகழ்வில் பாமக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம் தலைமை வகித்தாா். அதிமுக மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் அசோக்குமாா், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Story image