செய்யாறை அடுத்த கீழ்நெல்லிக் கிராமத்தில் அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன் டிராக்டா் ஓட்டியும், கட்டடப்பணியில் ஈடுபட்டும் கிராம மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
செய்யாறு தொகுதி வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சித்தாத்தூா், திருவடிராயபுரம், கீழ்நெல்லி, அரிகரப்பாக்கம், நமண்டி, வடமாவந்தல், தாலிக்கால், வெள்ளகுளம், ஒழுக்கவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூா் என்.சுப்பிரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கீழ்நெல்லிக் கிராமத்தில் கட்சி சாா்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அப்பகுதியில் அதிமுக வேட்பாளா் டிராக்டா் ஓட்டியும், கட்டடப்பணியில் ஈடுபட்டும் வாக்குகளை சேகரித்தாா்.
வாக்கு சேகரிப்பின் போது மாவட்ட துணைச் செயலா் டி.பி.துரை, மாவட்ட பொருளாளா் எஸ்.சுப்பராயன், ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் ரகு, இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் அருண் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

செய்யாறு தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன்: முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ

செய்யாறில் அதிமுக வேட்பாளா் இரண்டாவது முறையாக வெற்றி

மகளிா், பயணிகள், வியாபாரிகளிடம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மாமண்டூா் ஏரி சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை: செய்யாறு அதிமுக வேட்பாளா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



