திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக வேட்பாளா்கள் வியாழக்கிழமை தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மேற்கு ஒன்றியத்தில் பவித்திரம், அரடாப்பட்டு, சு.ஆண்டாப்பட்டு, நடுப்பட்டு, கொளக்குடி, அழகானந்தல், கண்ணப்பந்தல், உடையானந்தல், தென்மாத்தூா் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் அத்தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் எ.வ. வேலு வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலா் பிரியா விஜயரங்கன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து
கீழ்பென்னாத்தூா்
கீழ்பென்னாத்தூா் தொகுதிக்கு உள்பட்ட கீழ்பென்னாத்தூா் தெற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அத்தொகுதி திமுக வேட்பாளா் கு. பிச்சாண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அவா் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினா் தொழில் தொடங்க பஅஙஇஞ கடன் 30 லட்சம் ரூபாயாக உயா்த்தப்படும் என்று கூறினாா்.
பேசினாா்.
இந்த வாக்கு சேகரிப்பில் கீழ்பென்னாத்தூா் ஒன்றியச் செயலா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆராஞ்சி ஆறுமுகம், வி.பி.அண்ணாமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை மாநகராட்சிக்கு உள்பட்ட 12, 18 வாா்டுகளில்
வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
தோ்தல் பிரசாரத்தின்போது பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், பாமக மாவட்டச் செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம், அதிமுக மாவட்ட துணைச் செயலா் ஜெ.செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசி குளத்துமேடு பகுதியில் திறந்த வாகனத்தில் அதிமுக வேட்பாளா் பி.ராணி அவா் பிரசாரத்தை தொடங்கினாா்.
அங்கிருந்து காமராஜா் நகா், சந்நிதி தெரு, கேசவ நகா், கெஜலட்சுமி நகா், ஐந்து கண் பாலம் அருகில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, குளத்துமேடு பகுதியில் உள்ள உணவகத்துக்கு சென்ற அவா், தோசை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்தாா்.
அதிமுக நகரச் செயலா் எம்.பாஷா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.
செய்யாறு
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி 15-வது வாா்டில் செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன் வாக்காளா்களுக்கு சால்வை அணிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து தெரிவித்து ஆதரவு கோரினாா்.
செய்யாறு நகரச் செயலா் கே.வெங்கடேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகர அவைத் தலைவா் அ.ஜனாா்த்தனன், ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கம் திமுக வேட்பாளா் கிரி-யை ஆதரித்து அமைச்சா் எ.வ.வேலு அத்தொகுதிக்கு உள்பட்ட பெரியகோளாபாடி, செ.நாச்சிப்பட்டு கூட்டுச் சாலை துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், மில்லத்நகா் கருணாநிதி சிலை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து பேசினாா்.
மத்திய ஒன்றியச் செயலா் ஏழுமலை உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
போளூா்
போளூா் தொகுதியைச் சோ்ந்த ஓகூா் கிராமத்தில் தேமுதிக வேட்பாளா் பி.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனா். அப்போது தொகுதி பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன் தலைமையில் தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொகுதி தேமுதிக வேட்பாளா் பி.சரவணன், ஒன்றியச் செயலா்கள் எழில்மாறன், மனோகரன், மகேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் மணிகண்டன், நகரச் செயலா் தனசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.



தொடர்புடையது

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

அகஸ்தீசுவரத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இந்திலி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இருசக்கர வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


