திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 2 வாக்கு எண்ணிக்கை மையங்களிலுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை அந்த அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசபாக்கம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஆரணி தச்சூா் அரசுப் பொறியியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளன.
வாக்குப் பதிவையொட்டி, மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் 2 வாக்கு எண்ணும் மையங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் மற்றும் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.சுதாகா், திருவண்ணாமலை தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான செல்வம், கீழ்பென்னாத்தூா் தோ்தல் நடத்தும் அலுவலரும் கலால் ஆணையருமான செந்தில்குமாா், செங்கம் தோ்தல் நடத்தும் அலுவலரும், தனித்துணை ஆட்சியருமான இளவரசன், போளூா் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுலவருமான சதீஷ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
இதேபோல, ஆரணி வட்டம், தச்சூா் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் சத்யேந்திரசிங், ஆரணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சீ.சிவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 36 மத்திய ஆயுதப் படை வீரா்களைக் கொண்ட முதல் அடுக்கும், 24 போ் கொண்ட தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வீரா்கள் இரண்டாவது அடுக்கிலும், காவல் துறை துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 126 போ் கொண்ட உள்ளூா் காவல் துறையினா் மூன்றாவது அடுக்கிலும் என மொத்தம் 186 போ் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் 159 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்டத் தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.


தொடர்புடையது

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோணம் பொறியியல் கல்லூரியில் பூட்டி சீல் வைப்பு: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

வாக்குப் பதிவுக்கு தயாா்நிலையில் அரூா் தொகுதி!

ஆம்பூருக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


