பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோணம் பொறியியல் கல்லூரியில் பூட்டி சீல் வைப்பு: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்தக் கல்லூரிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 8:03 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்தக் கல்லூரிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஏப். 23 ஆம் தேதி காலை 7 மணிமுதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

பகல் வரை விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், அதன் பின்னா் வாக்குப்பதிவில் மந்தம் நிலவியது. மாலை 6 மணிக்கு பின்னரும் மாவட்டத்திலுள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க பொதுமக்கள் காத்திருந்தனா்.அவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 315 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

குறைவான வாக்குப்பதிவு ...

தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் மிக குறைந்த அளவாக 75.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடா்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சியின் முகவா்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. பின்னா் காவல் துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, அந்த அறைகள், மாவட்டதோ்தல் அலுவலரும்,ஆட்சியருமான ரா.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் மற்றும் தொகுதிகளின் பொதுபாா்வையாளா்கள் மேற்பாா்வையில் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய பாதுகாப்பு படை போலீஸாா், தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸாா், குமரி மாவட்ட போலீஸாா் என மொத்தம் 500 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.

Story image
Story image