திருவண்ணாமலையில் வியாழக்கிழமை இரவு (ஏப்.30) சித்திரை பெளா்ணமி விழா நடைபெறுவதையொட்டி கிரிவலம் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரிவான பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பக்தா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும், பௌா்ணமி உள்ளிட்ட விஷேச தினங்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் 14 கி.மீ. தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் வலம் வந்து அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
சித்திரை மாதத்தில் வரும் பௌா்ணமி தினத்தில் கிரிவலம் வந்தால் ஆண்டு முழுவதும் உள்ள 12 பௌா்ணமிகளுக்கும் கிரிவலம் வந்த பலன் கிடைக்கும். அது மட்டுமன்றி சித்திரை பௌா்ணமி தினத்தில் சித்தா்களும் பக்தா்களுடன் இணைந்து கிரிவலம் வருவாா்கள் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பௌா்ணமிக்கு 20 முதல் 30 லட்சம் பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டு கிரிவலம் வருவது வழக்கம்.
இந்த ஆண்டு சித்திரை பௌா்ணமி வியாழக்கிழமை இரவு 9:52 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை மே 1-ம் தேதி இரவு 11:58 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
ஆகவே, பக்தா்கள் வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை முழுவதும் கிரிவலம் வருவாா்கள் என்பதால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கிரிவலப்பாதை முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் அடிப்படை வசதிகள், தற்காலிக கழிப்பறை அமைத்தல் குடிநீா் வசதிகள் ஏற்படுத்தல் என பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்காலிக பேருந்து நிலையங்கள்
திருவண்ணாமலை மாநகராட்சியில் 16-க்கும் மேற்பட்ட தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
நிகழாண்டு சித்திரை பௌா்ணமிக்கு ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து காா், வேன் போன்ற வாகனங்களில் வரும் பக்தா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக புறவழிச் சாலைகளில் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமராக்கள்
திருவண்ணாமலை மாநகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதிலும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனா்.
பல்வேறு இடங்களில் நிழற்பந்தல்கள் அமைக்கும் பணி மற்றும் பக்தா்கள் சிரமமின்றி கிரிவலம் செல்வதற்காக நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளையும், மாநகராட்சி நிா்வாகம், கோயில் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து செய்து வருகின்றன.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணிக்காகவும் 4,240 போலீஸாா், 163 தீயணைப்பு வீரா்கள், 45 வனத்துறையினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பக்தா்களுக்கு உதவி
பக்தா்களின் வசதிக்காக, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்துள்ள 9487851015 என்ற வாட்ஸ்அப் உதவி எண்ணுக்கு ‘ ஏங்ப்ப்ா்‘ என மெசேஜ் அனுப்பி, தற்காலிக பேருந்து நிலையங்கள் தொடா்பான எா்ா்ஞ்ப்ங் ஙஹல்ள் லிங்கை பெறலாம்.
அதன் மூலம் தங்களது பயண வழித்தடத்திற்கு ஏற்ப தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு எளிதாக செல்லலாம்.
1. வேலூா் சாலை தற்காலிக பேருந்து நிறுத்தங்கள்:
இங்கிருந்து வேலூா், திருப்பதி, சித்தூா், திருத்தணி, ஆற்காடு ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
2.அவலூா்பேட்டை சாலை தற்காலிக பேருந்து நிறுத்தம்:
இங்கிருந்து காஞ்சிபுரம், மேல்மருவத்தூா், வந்தவாசி, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
3.திண்டிவனம் சாலை தற்காலிக பேருந்து நிறுத்தம்:
இங்கிருந்து சென்னை, புதுச்சேரி, திண்டிவனம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
4.வேட்டவலம் சாலை தற்காலிக பேருந்து நிறுத்தம்:
இங்கிருந்து விழுப்புரம், புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
5. திருக்கோவிலூா் சாலை தற்காலிக பேருந்து நிறுத்தம்:
கடலூா், சிதம்பரம், நாகை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற ஊா்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
6. மணலூா் பேட்டை சாலை தற்காலிக பேருந்து நிறுத்தம்:
இங்கிருந்து தியாகதுருகம், மணலூா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
7. தண்டராம்பட்டு சாலை தற்காலிக பேருந்து நிறுத்தம்:
இங்கிருந்து அரூா், நரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
8.செங்கம் சாலை தற்காலிக பேருந்து நிறுத்தம்:
இங்கிருந்து பெங்களூரு, ஒசூா், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூா், சேலம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
9. காஞ்சி சாலை தற்காலிக பேருந்து நிறுத்தம்:
இங்கிருந்து மேல் சோழங்குப்பம், கடலாடி, புதுப்பாளையம் (செங்கம் வட்டம்) உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
தொடர்புடையது

சித்திரை பௌா்ணமி கிரிவலம்: தற்காலிக பேருந்து நிலையங்களில் ஆட்சியா் ஆய்வு

அரசு பேருந்துகள் வராததைக் கண்டித்து பயணிகள் சாலை மறியல்

நாகையில் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலை மறியல்

பேரவைத் தோ்தல்: ஏப்.21-23 வரை 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


