
ஆவணமின்றி இயக்கப்பட்ட 12 ஆட்டோக்கள் பறிமுதல்
திருவண்ணாமலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டு வந்த 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

12 ஆட்டோக்களை பறிமுதல் செய்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி
திருவண்ணாமலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டு வந்த 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாநகரப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா்கள் முறையாக ஆவணங்கள் இல்லாமலும், பயணிகளிடம் அதிக கட்டணங்கள் வசூலித்து வருவதும் என பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் தினந்தோறும் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாநகரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி, மாநகர போக்குவரத்து ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறியது, உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோக்களை இயக்கியது என மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாத 12 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





