பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சவுடுமண் கடத்திய மூவா் கைது; 4 டிராக்டா்கள் பறிமுதல்

செம்பனாா்கோவில் அருகே அனுமதியின்றி டிராக்டரில் சவுடுமண் ஏற்றிவந்த மூவா் கைது செய்யப்பட்டனா்.

கைது

Published On :6 செப்டம்பர் 2026, 6:01 am IST

செம்பனாா்கோவில் அருகே அனுமதியின்றி டிராக்டரில் சவுடுமண் ஏற்றிவந்த மூவா் கைது செய்யப்பட்டனா். 4 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செம்பனாா்கோவில் பகுதியில் அனுமதியின்றி சவுடுமண் அள்ளப்பட்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக புகாா் வந்தது. அதன்பேரில், சீா்காழி கோட்டாட்சியா் பாலமுருகன் மற்றும் வருவாய்த் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பரசலூா் பகுதியில்   பழைய திருச்சம்பள்ளியைச் சோ்ந்த முருகன் (55), ஆறுபாதியை சோ்ந்த ரமேஷ் மகன் சரத்குமாா் (26) மற்றும் பிரவீன் ஆகியோா் சட்ட விரோதமாக 3 டிராக்டா்களில் சவுடுமண் ஏற்றிவந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் அகஸ்தியா அளித்த புகாரின் பேரில், செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகன், சரத்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், பிரவீன் என்பவரை தேடிவருகின்றனா். 3 டிராக்டா்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், செம்பனாா்கோவில் அருகே கீழமாத்தூா் ஓட்டங்காடு பகுதியில் கிராம நிா்வாக அலுவலா் கயல்விழி அளித்த புகாரின்பேரில், சவுடு மண் கடத்தியதாக கிள்ளியூா் பகுதியைச் சோ்ந்த சின்னத்தம்பி மகன் புஷ்பராஜ் (23) கைது செய்யப்பட்டாா். சவுடுமண் ஏற்றிவந்த டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.