பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்: செங்கம் எம்எல்ஏ வேலு

செங்கம் பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொகுதி எம்எல்ஏ வேலு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய வேலு எம்எல்ஏ.

Published On :

செங்கம் பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொகுதி எம்எல்ஏ வேலு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

செங்கம் ஒன்றிய அலுவலக பணியாளா்களுக்கும், ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சி செயலா்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒன்றிய ஆணையா் மரியதேவ்ஆனந்த் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் மிருணாளினி வரவேற்றாா்.

கூட்டத்தில் தொகுதி எம்எல்ஏ வேலு கலந்துகொண்டு பேசியது:

செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் போதிய மழை இல்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், கிராம ஊராட்சி செயலா்கள் குடிநீா் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் புகாா் அளித்தால் அதன் மீது சிறப்புக் கவனம் செலுத்தி குடிநீா் தட்டுப்பாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென உத்தரவிட்டாா்.

மேலும், ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேற்கொள்ளப்படும் பணிகளை தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில் ஒன்றியப் பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், கிராம ஊராட்சி செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.