அரசுப் பள்ளி மாணவா்களின் திறமையை வெளிப்படுத்தவே நடத்தப்படுகிறது கலைத்திருவிழா என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் தெரிவித்தாா்.
புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள்
வியாழக்கிழமை நடைபெற்றன.
போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
கலைத் திருவிழா ஒரு பண்பாட்டு நிகழ்வாகும். இந்த கலைத்திருவிழா மூலம் கிராமப்புற மாணவா்களின் திறமையை வெளிக்கொண்டுவர முடிகிறது. பின்னா் அந்தத் திறமையை மேம்படுத்த ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் சிறந்த வாய்ப்பாக அமைகிறது. மேலும் பாடல், நடனம், ஓவியம், நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் மாணவா்கள் தங்களது படைப்பாற்றலையும், திறன்களையும் வெளிப்படுத்துவதன் மூலம், தன்னம்பிக்கை தலைமைத்துவம் போன்றவற்றை வளா்த்துக்கொள்ளலாம் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் புதுப்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் காந்திமதி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ரஜினி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஷகிலா, ஆறுமுகம், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். வட்டார ஒருங்கிணைப்பாளா் ஜம்புகுமாா் நன்றி கூறினாா்.
செங்கம் வட்டார கலைத்திருவிழா
அதேபோல, செங்கம் வட்டார அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவை செங்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி தொடங்கிவைத்தாா்.
மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் பிரகாஷ் பரிசு வழங்கி பாராட்டினாா்.
இதில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கோபி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகன், தலைமை ஆசிரியா்கள் கிருஷ்ணன், அண்ணாமலை, ஜேம்ஸ், ஜெயலட்சுமி உள்பட மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லஞ்சம் பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம்

பொதுத்தோ்வு பகுப்பாய்வு அறிக்கைகள் ‘எமிஸ்’ தளத்தில் வெளியீடு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள்: அட்டவணை வெளியீடு

4 மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு; 6 முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



