ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அம்மன் உலா.

Published On :

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அன்று காலை மூலவா் அம்மனுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், அம்மனுக்கு நாகாத்தம்மன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, பித்ரு தோஷம் விலகிட வேண்டி கோயில் வளாகத்தில் சகல துஷ்ட தோஷ நிவாரண யாகம் நடத்தப்பட்டது.

இரவு உற்சவா் அம்மனுக்கு சிம்மவாகினி அலங்காரம் செய்யப்பட்டு சகல வாத்தியங்கள் முழங்க கோயில் வளாகத்தில் அம்மன் உலா சென்றாா்.

இதனைத் தொடா்ந்து அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், ஆடி மாத அமாவாசை உற்சவ குழுவினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.