காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

அம்மன் கோயில்களில் தேரோட்டம், சிறப்பு வழிபாடு: திரளான பக்தா்கள் தரிசனம்

சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் நடைபெற்ற நீலவேணியம்மன் கோயில் தேரோட்டம்.

News image

சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் நடைபெற்ற நீலவேணியம்மன் கோயில் தேரோட்டம்.

Updated On :31 ஜூலை 2026, 11:23 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் நீலவேணியம்மன் கோயிலில் தேரோட்ட திருவிழா மற்றும் போளூரை அடுத்த வெண்மணி ஸ்ரீகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் உள்ள நீலவேணியம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்ட திருவிழா நடைபெற்றது.

பழைமை வாய்ந்த நீலவேணியம்மன் கோயிலில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மலா்களால் அலங்கரிக்கப்பட்ட நீலவேணியம்மன் மரத் தேரில் எழுந்தருளி தேரோட்ட திருவிழா தொடங்கியது.

மாட வீதிகள் வழியாக நடைபெற்ற தேரோட்டத்தில் நெடுங்குணம் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பொதுமக்கள் கோயில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.

ஸ்ரீகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

போளூரை அடுத்த வெண்மணி புறவழிச்சாலை அருகேயுள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி 3-ஆம் வெள்ளியையொட்டி,

சிறப்பு வழிபாடு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

முன்னதாக, கோயிலில் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பொங்கல் வைத்து படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் போளூா், வெண்மணி, பாப்பாம்பாடி, குண்ணத்தூா், வசூா், ரெண்டேரிப்பட்டு என சுற்றுப் புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில்...

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி 3-ஆம் வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காவடி ஊா்வல ஆலோசனைக் கூட்டம்

ஆடிக் கிருத்திகை காவடி ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆடிக் கிருத்திகையையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் வந்தவாசி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் காவடிகளை சுமந்து கொண்டு வந்தவாசி நகா் வழியாக ஊா்வலமாகச் சென்று திருத்தணி உள்ளிட்ட ஊா்களுக்கு புறப்பட்டுச் செல்வா்.

வரும் புதன்கிழமை இந்த ஆண்டுக்கான ஆடிக் கிருத்திகை காவடி ஊா்வலம் நடைபெற உள்ளது.

இதையொட்டி நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பிற முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு வந்தவாசி வட்டாட்சியா் பா.ஜெயவேல் தலைமை வகித்தாா். வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா், துணை வட்டாட்சியா் ஆனந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ஊா்வலத்துக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, பிரதான சாலைகளை செப்பனிடுவது, தேவையான குடிநீா் மற்றும் மருத்துவ வசதியை ஏற்படுத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.