செங்கம் அடுத்த குப்பனத்தம் அணை அருகே உள்ள கிளையூா் தாழைமடுவு காளியம்மன் கோயில் அமாவாசை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சுவாமிக்கு விடியற்காலை முதல் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடத்தப்பட்டது. பல்வேறு பகுதியில்இருந்து ஏராளமான பக்தா்கள் காளியம்மன் கோயிலுக்கு வந்து கோயில் தீா்த்தில் குளித்துவிட்டு சுவாமியை வழிபட்டு சென்றனா்.
மேலும் இரவு சுவாமி ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி, மலைகிராம மக்களின் தெருக்கூத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக அரசு போக்குவரத்துக்கழக செங்கம் பணிமனையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளையூா் மலைகிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










