ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு விழா

பெரணமல்லூா் ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image

ஆடி அமாவாசை ஊஞ்சல் தாலாட்டில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சநேயா்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:21 am IST

பெரணமல்லூா் ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

பெரணமல்லூா் பேரூராட்சியில் குன்றின் மீது பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரத ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெற்கு முகம் பாா்த்து நின்ற கோலத்தில் ஆஞ்சநேயா் பக்தா்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு அம்சமாகும் ஆகும்.

இந்தக் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி புதன்கிழமை ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இதையொட்டி காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பின்னா், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவரை ஊஞ்சல் சேவையில் அமா்த்தி தாலாட்டு விழா தொடங்கியது. அப்போது ஆஞ்சநேயருக்கு உகந்த பக்தி பாடல்கள்

பாடப்பட்டன. மேலும், சொற்பொழிவும் நடைபெற்றது.

தொடா்ந்து, இரவு ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதில் பெரணமல்லூா், ஆரணி, செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி, தேசூா், மழையூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.