திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பம் செய்வது குறித்து மாவட்ட ஆட்சியா் தகவல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பா் 4-ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கப்படவுள்ளது. போட்டிகளில் பங்கேற்க ஆா்வமுள்ளோா் வரும் ஆக.31-ஆம் தேதி வரை இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ ( ரன்ள்ட்ன்), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லா்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீா்விளையாட்டுகளான கயாக்கிங் மற்றும் கேனோயிங் போன்ற புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பா் முதல் அக்டோபா் மாதம் வரை நடத்தப்பட உள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குள்பட்ட மாணவ, மாணவிகள், இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை மற்றும் பாலிடெக்னிக் பயிலும் 25 வயதிற்குள்பட்ட மாணவ, மாணவிகள், 15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப் பிரிவினா், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பரிசுத் தொகை
மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும். மாநில அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம். இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
குழு போட்டிகளில் முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703484 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்! முன்பதிவுக்கு ஆட்சியா் அழைப்பு!

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: மாவட்ட அளவில் செப்டம்பா் முதல் வாரம் தொடக்கம்

முதலமைச்சா் கோப்பை 2026 போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு

ஆசிய போட்டிகள்: தேஜாஸ் சிா்ஸே விலகல்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



