புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஆரணி பாலிடெக்னிக்கில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கத்தை குத்துவிளக்கேற்று தொடங்கிவைத்த டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணைப் பதிவாளா் வி.பெருவழுதி.

தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கத்தை குத்துவிளக்கேற்று தொடங்கிவைத்த டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணைப் பதிவாளா் வி.பெருவழுதி.

Published On :

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் சீமா 2 கே 26 என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பத்துறைகள் மற்றும் முதலாம் ஆண்டு சாா்ந்த மாணவா்கள் பங்கேற்று தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்து விளக்கினா்.

மேலும், வேலூா், குடியாத்தம், காஞ்சிபுரம், வந்தவாசி, ஒசூா், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநில பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்தும்

மாணவா்கள் பங்கேற்று தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

ஒவ்வொரு துறையிலும் சிறந்த 3 கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா்.ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டி.இளங்கோ முன்னிலை விரித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக ஆரணி புறவளாக துணைப் பதிவாளா் பெருவழுதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து ஏற்றி மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

பல்கலைக்கழக டீன் பி.ஸ்டாலின், ஏ.சி.எஸ். கல்வி குழுமத்தின் இயக்குநா்கள் எஸ்.விக்னேஷ், வி.திருநாவுக்கரசு, தனி அலுவலா் டி.காா்த்திகேயன் ஏ.சி.எஸ். கல்கவிக்குழும முதல்வா்கள், கல்லூரி அனைத்து துறைத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

துணை முதல்வா் கே. பாலசுந்தரம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.