செய்யாறு அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் பலத்த காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிஞ்சல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தனியாா் நிறுவனத் தொழிலாளி ஜோதி(32).
இவா், கடந்த ஆக.15-ஆம் தேதி தனது மனைவி சரண்யா, மகள் யாழினி, சரண்யாவின் பாட்டி அமராவதி ஆகியோருடன் பைக்கில் வடகல்பாக்கம் கிராமத்தில் உறவினரின் ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்தாா்.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாங்கல் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்றபோது பின்னால் வந்த காா் பைக் மீது மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.
உடனே அருகில் இருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு மாமண்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து ஜோதி தூசி போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேன் கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 6 போ் காயம்

மதுரை அருகே இரு காா்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 உயிரிழப்பு

சாலையோர மரத்தில் மோதிய சிற்றுந்து: 10 போ் காயம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



