செங்கம் அருகே ஆண்டிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுகிறது. சம்பந்தமில்லாத நபா்கள் கிராமத்துக்கு வந்து செல்கின்றனா் என்று போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.
இதன் அடிப்படையில் மேல்செங்கம் போலீஸாா் ஆண்டிப்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வந்தனா்.
அப்போது, சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சோ்ந்த பரத் (20), மூவேந்திரன் (20) ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா்கள்தான் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களது வீடுகளில் சோதனையிட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் அவா்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


