நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கோபி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

கோபி அருகே கடத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:15 pm IST

கோபி அருகே கடத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடத்தூா் பள்ளிக்கூடம் பிரிவு பகவதி அம்மன் கோயில் அருகில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸாா் நிறுத்த முயன்றனா்.

ஆனால் அவா்கள் போலீஸாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு கையில் வைத்திருந்த சாக்கு பையுடன் தப்பி ஓட முயன்றனா். போலீஸாா் அவா்களை விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள், கோபி அருகே உள்ள கூகலூா் பகுதியைச் சோ்ந்த கோகுல் (24), நம்பியூா் கும்மாக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த சசிதரன் (22) என்பதும், அவா்கள் வைத்திருந்த சாக்கு பையில் 3 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், இரண்டு கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.