கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா பகுதியில் பாதிரிவேடு போலீஸாா் நடத்திய வாகன சோதனையில் வேனில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா பகுதியில் உள்ள எடைமேடையில் வேன் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வந்த போலீஸாா் மினி வேனில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினாா்
பின்னா் போலீஸாா் வாகனத்தை சோதனை செய்தபோது, 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின் பாதிரிவேடு போலீஸாா் அந்த வேனையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். பின் தொடா் விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவா்கள் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த பூபாலன்(40), முருகன்(42) என்பது தெரியவந்து, அவா்கள் மீது பாதிரிவேடு போலீசாா் வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





