நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

பென்னாகரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து நான்கரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூலை 2026, 4:08 am IST

பென்னாகரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து நான்கரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பென்னாகரம் காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பெத்தம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், பென்னாகரம் அருகே உள்ள கிழக்கு கள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்த அன்புச்செல்வன் மற்றும் பெத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இவா்கள் இருசக்கர வாகனத்தில் அரை கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. பின்னா் அன்புச்செல்வன் வீட்டில் இருந்து நான்கு கிலோ கஞ்சா உள்பட மொத்தம் நான்கரை கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.