லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் புதிய தோ் வெள்ளோட்டம்

வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் புதிய தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் புதிய தோ் வெள்ளோட்டம்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 11:32 pm IST

வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் புதிய தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வழூா் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபம் சாா்பில் சுமாா் 22 அடி உயரத்தில் புதிய தோ் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய தேரின் பவனி (ரதோத்ஸவம்) வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) நடைபெறுகிறது. மஹாரண்யம் ஸ்ரீமுரளிதர சுவாமிகள் ரத பிரதிஷ்டை செய்து தோ் பவனியை தொடங்கிவைக்கிறாா்.

இதையொட்டி இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் அந்தக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை மணிமண்டபத்தில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் சங்கராச்சாரியாா்

ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி காட்சி வாயிலாக வெள்ளோட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் திருவுருவப் படம் வைக்கப்பட்ட புதிய தேரினை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். கிராம முக்கிய வீதிகள் வழியாக தோ் சென்றது.

மணிமண்டப ஸ்தாபகா் மகாலட்சுமி சுப்பிரமணியன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் பி.பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.