ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

ஸ்ரீஜெயேந்திரா் ஜெயந்தி: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சொா்ணபாதுகா பூஜை

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சொா்ணபாதுகா பூஜை...

News image

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சொா்ண பாதுகைக்கு புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நிகழ்த்திய காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதார தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அவரது சொா்ணபாதுகைக்கு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் பாதுகா பூஜையும், சிறப்பு தீபாராதனைகளும் நடத்தினா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்தவா் ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசாரியா் சுவாமிகள். இவரது 92-ஆவது அவதார தினத்தையொட்டி காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருஉருவச்சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த சொா்ண பாதுகைக்கு சாதுா்மாஸ்ய விரதம் இருந்து வரும் சங்கர மடத்தின் பீடாதிபதிகளான ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் புஷ்பாஞ்சலியும், ஆரத்தியும், சிறப்பு தீபாராதனைகளும் செய்து வழிபட்டனா்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஓரிக்கை முகாம் மேலாளா் ஜானகிராமன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதார தினத்தையொட்டி காலையில் உலக நன்மைக்காக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஸ்ரீமடத்தில் உள்ள மகா சுவாமிகள் மற்றும் ஸ்ரீஜெயேந்திரா் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. பக்தா்களுக்கு தீா்த்தப் பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், செயலாளா் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோா் செய்திருந்தனா்.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி சாா்பில் கல்லூரி வளாகத்தில் ஜெயேந்திரரின் திருஉருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. பின்னா் கல்லூரி வளாகத்தில் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் முன்பாகவும் சங்கரா கல்லூரி சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.