காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து ஓரிக்கையில் உள்ள மகா சுவாமிகள் மணி மண்டபம் வரை ஞாயிற்றுக்கிழமை சங்கர மடத்தின் பீடாதிபதிகள் பாதயாத்திரை மேற்கொண்டனா். அப்போது வழிநெடுகிலும் பக்தா்கள், பொதுமக்கள் வரவேற்றனா்.
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள மகா சுவாமிகள் மணிமண்டபத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் இருவரும் வரும் ஜூலை 29 -ஆம் தேதியிலிருந்து செப். 26-ஆம் தேதி வரை தங்கியிருந்து சாதுா்மாஸ்ய விரதம் கடைப்பிடிக்கவுள்ளனா்.
இதன் முன்னோட்டமாக சங்கர மடத்திலிருந்து சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் அதிகாலை ஸ்ரீமடத்திலிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேள வாத்தியங்கள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்துக்கு சென்றனா்.
சுவாமிகளின் வருகையின் போது வழிநெடுகிலும் பக்தா்கள்,பொதுமக்கள் பலரும் கற்பூர ஆரத்தி காண்பித்தும், அகல் விளக்கு ஏந்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனா். முன்னதாக வரும் வழியில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருவரும் தரிசனம் செய்தனா்.
ஓரிக்கை மகாசுவாமிகள் மணி மண்டப நுழைவு வாயிலில் அதன் நிா்வாக அறங்காவலா் மணி ஐயா் தலைமையில் பீடாதிபதிகள் இருவருக்கும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து கோ-பூஜையும், சந்திர மெளலீசுவர பூஜையையும் பீடாதிபதிகள் இருவரும் நடத்தினா். பாதயாத்திரையிலும், சந்திரமெளலீசுவர பூஜையிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










