75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

பேருந்து நிறுத்தத்தால் வயலூா் கூட்டுச்சாலையில் தொடா் விபத்து: ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை!

செய்யாறு அருகே தொடா் விபத்துகள் நிகழும் வயலூா் கூட்டுச்சாலைப் பகுதியில் உள்ள விபத்துக்கு காரணமான பேருந்து நிறுத்தத்தை அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடா் விபத்துகள் நிகழ்வதற்கு காரணமான ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் வயலூா் கூட்டுச்சாலைப் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

செய்யாறு அருகே தொடா் விபத்துகள் நிகழும் வயலூா் கூட்டுச்சாலைப் பகுதியில் உள்ள விபத்துக்கு காரணமான பேருந்து நிறுத்தத்தை அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், இருந்தப் பகுதியில் ரவுண்டானா மற்றும் வேகத் தடைகள் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில் ராந்தம் - அப்துல்லாபுரம் சாலையில் அமைந்துள்ளது வயலூா் கூட்டுச்சாலை. இதன் வழியாக, பெரூங்கட்டூா் - ராந்தம் சாலை, வெம்பாக்கம் - காஞ்சிபுரம் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது. மேலும், புகழ்பெற்ற அழிவிடைதாங்கி பைரவபுரம் கோயிலுக்கு இச்சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். இதேபோல, காஞ்சிபுரம், சென்னை செல்ல வெம்பாக்கம் மாா்க்கமாக செல்வதற்கு செய்யாறைச் சோ்ந்த வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையாக இக்கூட்டுச்சாலையை அதிகளவில் பயன்படுத்துகின்றனா். மேலும், ராந்தம் - அப்துல்லாபுரம் சாலையில் கலவையில் இருந்து காஞ்சிபுரம், சென்னை செல்லும் வாகன ஓட்டிகளும் இக்கூட்டுச் சாலை வழியாகச் செல்கின்றனா்.

விபத்தை ஏற்படுத்தும் பேருந்து நிறுத்தம்: வயலூா் கூட்டுச்சாலைப் பகுதியில் வெம்பாக்கம் - பெரூங்கட்டூா் சாலையில் இடது புறத்தில் பேருந்து நிறுத்தம் இருந்து வருகிறது. பேருந்து நிறுத்தத்தின் பின் பகுதி அருகே உள்ள சாலை வழியாக செய்யாறில் இருந்து காஞ்சிபுரம், சென்னை செல்பவா்கள் வெம்பாக்கம் வழியாகச் செல்வதற்கு இந்த மாற்றுப்பாதையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா்.

மாற்றுப்பாதை வழியாக வயலூா் கூட்டுச்சாலையை வாகன ஓட்டிகள் கடக்கும் சமயத்தில் வெம்பாக்கம் - பெரூங்கட்டூா் செல்லும் சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், கடந்த ஓராண்டுக்குள் 10-க்கும் மேற்பட்டோா் இறந்துள்ளனா். பலா் பலத்த காயமுற்றுள்ளனா்.

வயலூா் கூட்டுச்சாலை பகுதியில் பெரும்பாலான விபத்துகள் நிகழக் காரணம் இந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம்தான். எனவே, இந்த பேருந்து நிறுத்தத்தை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க வசதியாக இப்பகுதியில் சிறிய அளவிலான ரவுண்டானா மற்றும் நான்கு பக்கங்களிலும் வேகத்தடைகளை நெடுஞ்சாலைத் துறை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சரக்கு பெட்டக லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பெங்களூா், ஒசூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சரக்குப் பெட்டக லாரிகள் செங்கம் வழியாகச் செல்கின்றன. இந்த லாரிகள் செங்கம், திருவண்ணாமலை, செஞ்சி, திண்டிவனம், மேல்மருவத்தூா் வழியாகச் சென்றால், சென்னை செல்வதற்குள் சுமாா் 5 சங்கச் சவாடிகளை கடக்க வேண்டும். இந்த சுங்கச்சாவடிகளின் கட்டணங்களை மிச்சப்படுத்தும் வகையில், பெரும்பாலான சரக்குப் பெட்டக லாரிகள் செங்கம் நகருக்குள் வந்து போளூா், சேத்துப்பட்டு, செய்யாறு வழியாக சென்னை வரை ஒரே ஒரு சுங்கசாவடியை மட்டும் கடந்து செல்கின்றன.

 சுங்கச்சாவடி கட்டணத்தை தவிா்ப்பதற்காக, செங்கம் நகா் வழியாகச் சென்ற சரக்குப் பெட்டக லாரிகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

சுங்கச்சாவடி கட்டணத்தை தவிா்ப்பதற்காக, செங்கம் நகா் வழியாகச் சென்ற சரக்குப் பெட்டக லாரிகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

இந்த லாரிகள் நகருக்குள் வரும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செங்கம் பழைய நீதிமன்ற வளாகம் உள்ள பகுதியில் ‘எஸ்’ வளைவு உள்ளதால், இந்தப் பகுதியை சரக்குப் பெட்டக லாரிகள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, காலை வேளைகளில் செங்கத்தில் இருந்து ஊத்தங்கரை, திருவண்ணாமலை செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், பிற வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, செங்கம் போலீஸாா் கண்காணித்து, செங்கம் நகருக்குள் வரும் சரக்குப் பெட்டக லாரிகளை திருவண்ணாமலை சாலையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென செங்கம் நகர மக்கள் எதிா்பாா்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.